search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    நாமக்கல்லில் இறைச்சி கடைக்காரர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

    நாமக்கல்லில் இறைச்சி கடைக்காரர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    நாமக்கல்:

    முழு ஊரடங்கையொட்டி நேற்று மருந்து கடைகள் மற்றும் ஆவின் பாலகம் தவிர இதர கடைகளை திறக்கக்கூடாது என மாவட்டம் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. நாமக்கல் நகரை பொறுத்தவரையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி இறைச்சி கடைகள் உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டு உள்ளதா? என நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் உத்தரவின்பேரில் சுகாதார அலுவலர் சுகவனம் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர்.

    சேலம் சாலை, பரமத்தி சாலை மற்றும் சேந்தமங்கலம் சாலை பகுதிகளில் நடத்திய சோதனையில் அரசின் உத்தரவை மீறி 6 இறைச்சி கடைகள் திறந்து இருப்பது தெரியவந்தது. இந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இனிவரும் காலங்களில் முழு ஊரடங்கின்போது கடைகள் திறந்து இருப்பது தெரியவந்தால் கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
    Next Story
    ×