search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    அதிமுக உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் தீவிரம்: 8-ம் தேதிக்குள் புதுப்பிப்பு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல்

    அதிமுக உறுப்பினர்கள் தங்கள் பதிவை புதிப்பிப்பதற்கான விண்ணப்ப படிவத்தை வருகின்ற 8-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க கட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய உறுப்பினர்களின் சேர்க்கை மற்றும் ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் தங்கள் பதிவை புதுப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இவர்கள், உரிய கட்டண தொகையுடன் விண்ணப்ப படிவத்தை ஆகஸ்ட் 8-க்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உறுப்பினர் அட்டை உள்ளவர்கள் மட்டுமே கட்சி அமைப்புத் தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×