search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்வு எழுதும் மாணவிகள் (கோப்பு படம்)
    X
    தேர்வு எழுதும் மாணவிகள் (கோப்பு படம்)

    பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் புள்ளி விவரம்: 98.10 சதவீத தேர்ச்சியுடன் கோவை முதலிடம்

    பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் மற்றும் பாடவாரியாக தேர்ச்சி விவரங்களை சுருக்கமாக பார்ப்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற  பிளஸ்-1 பொதுத்தேர்வு மற்றும் கடந்த 27-ந்தேதி நடைபெற்ற பிளஸ்-2 மறுதேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலம் தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் பார்க்கலாம்.

    தேர்வு முடிவுகள் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் மார்ச் 4ம் தேதி முதல் 26ம் தேதி வரை பிளஸ்1 பொதுத்தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

    *பள்ளி மாணாக்கராகவும், தனித் தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை - 8,30,654
    *பள்ளி மாணாக்கராய் தேர்வு எழுதியோர் -  8,15,442
    * மாணவியரின் எண்ணிக்கை- 4,35,881
    * மாணவர்களின் எண்ணிக்கை - 3,79,561
    * பொதுப் பாடப்பிரிவில் தேர்வு எழுதியோரின் எண்ணிக்கை 7,63,424
    * தொழிற்பாடப்பிரிவில் தேர்வு எழுதியோரின் எண்ணிக்கை 52,018

    தேர்ச்சி விவரங்கள்:

    *  தேர்ச்சி பெற்றவர்கள் - 96.04 சதவீதம்
    *  மாணவியர் 97.49 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்
    *  மாணவர்கள் 94.38 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்
    *  மாணவியர் மாணவர்களை விட 3.11 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கூடுதல் விவரங்கள் (தமிழகத்தில் அமைந்துள்ள பள்ளிகள்)

    *  மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை - 7249
    *  100 சதவீத தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை - 2716

    பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி விகிதம்

    1. அரசுப்பள்ளிகள் - 92.71 சதவீதம்
    2. அரசு உதவி பெறும் பள்ளிகள் - 96.95 சதவீதம்
    3. மெட்ரிக் பள்ளிகள் - 99.51 சதவீதம்
    4. இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் - 96.20 சதவீதம்
    5. பெண்கள் பள்ளிகள் -97.56 சதவீதம்
    6. ஆண்கள் பள்ளிகள் - 91.77 சதவீதம்

    பாடப்பிரிவுகள் வாரியான தேர்ச்சி விகிதம்

    1. அறிவியல் பாடப்பிரிவுகள் - 96.33 சதவீதம்
    2. வணிகவியல் பாடப் பிரிவுகள் - 96.28 சதவீதம்
    3. கலைப் பிரிவுகள்- 94.11 சதவீதம்
    4. தொழிற்பாடப் பிரிவுகள் - 92.77 சதவீதம்

    முக்கிய பாடங்களில் தேர்ச்சி விகிதம் 

    1. இயற்பியல் -96.68 சதவீதம்
    2. வேதியியல் - 99.95 சதவீதம்
    3. உயிரியல் - 97.64 சதவீதம்
    4. கணிதம் - 98.56 சதவீதம்
    5. தாவரவியல்- 93.78 சதவீதம்
    6.விலங்கியல் - 94.53 சதவீதம்
    7. கணினி அறிவியல் - 99.25 சதவீதம்
    8. வணிகவியல் - 96.44 சதவீதம்
    9. கணக்குப் பதிவியல் - 98.16 சதவீதம்

    மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்கள்

    1.கோயம்புத்தூர் - 98.10 சதவீதம்
    2. விருதுநகர் - 97.90 சதவீதம்
    3. கரூர் -97.51 சதவீதம்

    தேர்வு எழுதிய மாற்றுத் திறனாளி மாணாக்கரின் மொத்த எண்ணிக்கை 2819. இதில் 2672 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×