என் மலர்

  செய்திகள்

  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
  X
  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

  ராஜ்பவனில் 3 பேருக்கு கொரோனா- ஆளுநர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக ஆளுநர் மாளிகையில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
  சென்னை:

  கடந்த சில நாள்களுக்கு முன்னர், சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்பட 84 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

  அதனை தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 38 பேருக்கு தற்போது கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

  இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் 38 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் இன்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக  ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஆளுநர் பன்வாரிலாலுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்ததில் நலமுடன் உள்ளதாகவும் 7 நாள் தனிமைப்படுத்தப்படவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

  இந்நிலையில் மருத்துவர்களின் அறிவுறுத்தலை ஏற்று ஆளுநர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

  Next Story
  ×