என் மலர்

  செய்திகள்

  முக கவசம்
  X
  முக கவசம்

  ஆக.5ந்தேதி முதல் ரேசனில் இலவச முக கவசங்களை பெறலாம்- அமைச்சர் காமராஜ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் ரேசன் கடைகளில் இலவச முக கவசங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச முககவசங்கள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

  அதாவது, முதற்கட்டமாக பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் (பெருநகர சென்னை மாநகராட்சி தவிர) வசிக்கும் 69 லட்சத்து 9 ஆயிரம் குடும்பங்களுக்கு 4 கோடியே 44 லட்சம் முகக்கவசங்கள் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட இருக்கிறது.

  இந்த நிலையில் ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் ரேசன் கடைகளில் இலவச முக கவசங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:- ஆகஸ்ட் 1,3,4 ஆகிய தேதிகளில் வீட்டிற்கே சென்று முக கவசத்திற்கான டோக்கன் வழங்கப்படும். பின்னர் டோக்கனை கொண்டு சென்று 5-ந்தேதி முதல் ரேசன் பொருட்களுடன் இலவச முக கவசங்களை பெற்றுக்கொள்ளலாம். குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 2 முக கவசங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். 
  Next Story
  ×