என் மலர்

  செய்திகள்

  கோவில் உண்டியல் திருட்டு
  X
  கோவில் உண்டியல் திருட்டு

  ராமநாதபுரம் அருகே கோவில் உண்டியல் திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராமநாதபுரம் அருகே கோவில் உண்டியல் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  ராமநாதபுரம்:

  ராமநாதபுரம் அருகே உள்ள அச்சுந்தன்வயல் பகுதியில் கண்ணன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூசாரி குமாரவேல் ஆடிவெள்ளி பூஜைகளை முடித்துக்கொண்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். நேற்று காலை மீண்டும் கோவிலை திறக்க வந்தபோது பின்பக்க இரும்பு கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சிஅடைந்தார். இதனை தொடர்ந்து கிராம தலைவர் சண்முகம் மகன் செட்டியப்பன் உள்ளிட்டோர் அங்கு சென்று பார்த்தபோது உண்டியலை திருடி உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றது தெரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன், சப்-இன்ஸ்பெக்டர் நாகநாதன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
  Next Story
  ×