search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் உண்டியல் திருட்டு"

    கோவில் உண்டியலை குருக்களே திருடி சென்ற சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர் கிராமத்தில் வீரனார் கோவில் உள்ளது. புதிதாக கட்டப்பட்ட இந்த கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது மண்டல பூஜைகள் நடந்து வருகிறது.

    இக்கோவிலில் கும்பகோணத்தை சேர்ந்த கணேசன் (வயது 29) என்பவர் குருக்களாக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை கணேசன் குருக்கள் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் ஒக்கநாடு மேலையூருக்கு வந்தார்.

    பின்னர் அங்கு வீரனார் கோவிலில் இருந்த உண்டியலை அப்படியே தூக்கிகொண்டு ஒரு மூட்டையாக கட்டினார். பின்னர் நண்பர் உதவியுடன் மூட்டையை தூக்கி கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

    மாலையில் கோவிலுக்கு வந்த கிராம மக்கள். உண்டியல் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி ஒரத்தநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியலை திருடி சென்ற கணேசன் குருக்கள், அவரது நண்பர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    புதிதாக கட்டப்பட்ட இக்கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனால் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். இதனால் கொள்ளை போன உண்டியலில் ரூ.1 லட்சம் வரை பணம் இருந்திருக்கும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

    ஒரத்தநாடு அருகே சமையன்குடிகாடு கிராமத்தில் சந்தான மாரியம்மன் கோவிலில் அம்மன் சிலையில் இருந்த ஒரு பவுன் தாலி திருட்டு போனது. இந்த திருட்டிலும் கணேசன் குருக்களுக்கு தொடர்பு இருக்கலாம் என கிராம மக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் இந்த திருட்டு குறித்தும் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    உண்டியலை கோவில் குருக்களே திருடி சென்ற சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×