என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ் பரிசோதனை
  X
  கொரோனா வைரஸ் பரிசோதனை

  தமிழகத்தில் 4வது நாளாக 6 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு - 6,986 பேருக்கு தொற்று

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் ஒரே நாளில் 6,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
  சென்னை:

  தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் 6,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 4வது நாளாக 6 ஆயிரத்தை கடந்து கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,13,723 ஆக உயர்ந்துள்ளது.

  தமிழகத்தில் 6911, வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 75 பேர் உட்பட 6,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இதுவரை 1,29,768 ஆண்கள், 83,932 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

  தமிழகத்தில் 62,305 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 6,986 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 85 பேர் உயிரிழந்துள்ளனர். 57வது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்க எண்ணிக்கையில் உயிரிழப்பு பதிவாகி உள்ளது. அரசு மருத்துவமனையில் 49 பேர், தனியார் மருத்துவமனையில் 36 பேர் கொரோனாவுக்கு மரணம்.  மேலும் வேறுபாதிப்பு இல்லாத 10 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 3,494 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்த மேலும் 5,471 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,51,055 லிருந்து 1,56,526 ஆக அதிகரித்துள்ளது.

  தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனாவுக்கு 53,703 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  சென்னையில் மேலும் 1,155 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 23வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 5,830 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.


  Next Story
  ×