search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஸ்பென்ட்
    X
    சஸ்பென்ட்

    பால் கொள்முதல் முறைகேடு - 4 பேர் சஸ்பெண்ட்

    மதுரை ஆவின் குளிர்விப்பான் நிலையங்களில் கொள்முதல் முறைகேடு தொடர்பாக 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
    மதுரை:

    நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவும் நீண்ட நாட்களாக அமலில் இருந்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் உணவகம் மற்றும் டீ கடைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக சில தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதலை குறைத்து விட்டன.

    இந்நிலையில் மதுரை ஆவின் குளிர்விப்பான் நிலையங்களில் கொள்முதல் முறைகேடு தொடர்பாக 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.   மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பால் உற்பத்தியாளர்கள் சிலர் சங்க உறுப்பினர்களிடம் பால் கொள்முதல் செய்வதைக் குறைத்துகாட்டி, உறுப்பினர்  அல்லாதவர்களிடம் கொள்முதல் செய்வதாக பல புகார்கள் எழுந்தவாறு இருந்தது.

    மேலும் இது  தொடர்பாக பால் உற்பத்தியாளர்கள் பலர் பால்வளத் துறைக்கு புகார்கள் அளித்தனர்.  புகாரின் அடிப்படையில் சிறப்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில், மதுரை மாவட்டத்தில் இத்தகைய முறைகேடு நடந்ததாக தெரியவந்தது.

    இதனையடுத்து 3 குளிர்விப்பான் நிலையங்களின் பொறுப்பாளர்கள் ரவி, ராமநாதன், மகாலிங்கம் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.  சங்கத்தில் உறுப்பினர் அல்லாதவர்களிடம் இருந்தும் பால் கொள்முதல் செய்வதாக புகார்கள் எழுந்ததின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×