என் மலர்

  செய்திகள்

  பிரதமர் மோடி - ராமதாஸ்
  X
  பிரதமர் மோடி - ராமதாஸ்

  ராமதாஸ் 82வது பிறந்தநாள்- பிரதமர் மோடி வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாசின் 82-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
  சென்னை:

  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று தனது 82-வது பிறந்தநாளை கொண்டாடினார். அதையொட்டி, நேற்று அவருக்கு தொலைபேசி வழியாக பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது, நீங்கள் நீடூழி வாழ வேண்டும். தங்களது அரசியல் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும். எனது இதயபூர்வமான வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்’, என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

  மேலும் உங்கள் பகுதியில் கொரோனா பாதிப்பு எப்படி இருக்கிறது? நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? என்றும் பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார். அதற்கு டாக்டர் ராமதாஸ், நான் திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்ட இல்லத்தில் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறேன். உங்கள் நலம் விசாரிப்புக்கும், பிறந்தநாள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி, என்று தெரிவித்தார்.

  தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொலைபேசி மூலம் டாக்டர் ராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தார். தனது வாழ்த்தில், ‘மூத்த அரசியல்வாதியுமான நீங்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், வளமும், நலமும் பெற்று நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்‘, என்று முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். இந்த தகவலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  அதேபோல துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் டாக்டர் ராமதாசை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

  தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார், தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், திருநாவுக்கரசர், எஸ்.ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி குலசேகரன், தேசிய மருத்துவத் தேர்வு வாரியம் முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.ராஜசேகரன், நீரியல் நோய் வல்லுனர் டாக்டர் ஏ.ராமச்சந்திரன், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் கே.ஆர்.பழனிச்சாமி, இதயநோய் வல்லுனர் டாக்டர் செங்கோட்டுவேலு, முக சீரமைப்பு வல்லுனர் பாலாஜி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடம் கோ.ப.செந்தில்குமார், கருணாஸ் எம்.எல்.ஏ., மார்க்சீய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி தலைவர் ஆனைமுத்து உள்பட பலரும் நேற்று டாக்டர் ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

  உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் டுவிட்டர் மூலம் டாக்டர் ராமதாசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
  Next Story
  ×