search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா தொற்றை கண்டறிய 42 காய்ச்சல் பரிசோதனை முகாம்

    திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கண்டறிய 42 காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் தினமும் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள், போலீசார் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களாக அறிகுறி இல்லாத பலருக்கு கொரோனா தொற்று இருப்பது, பரிசோதனையில் தெரியவந்தது. இந்தநிலையில் நோய் முற்றிய நிலையில் பலர் இறந்து விட்டனர்.

    அதை தடுக்கும் வகையில் கொரோனா பாதித்த பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தும்படி கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். இதில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலா 3 இடங்கள் வீதம் 14 ஒன்றியங்களிலும் தினமும் 42 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்த அறிவுறுத்தினார். அதன்படி மாவட்டம் முழுவதும் தினமும் 42 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதில் வட்டார மருத்துவ அலுவலர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்கின்றனர். இந்த முகாமில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி ஆகியவை பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்படுகிறது. மேலும் தேவைப்படும்பட்சத்தில் கொரோனா பரிசோதனை செய்யும்படி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அதிக அளவில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும் என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    Next Story
    ×