search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்ட ராமநாதபுரம் கலெக்டர்
    X
    அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்ட ராமநாதபுரம் கலெக்டர்

    ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு

    ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மாவட்ட கலெக்டர் வீர ராகவ ராவ் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 954 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 674 பேர் பூரண குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 33 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.

    இந்த நிலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மாவட்ட கலெக்டர் வீர ராகவ ராவ் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு மருத்துவமனைக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு காய்ச்சல் அறிகுறி பரிசோதனை மேற்கொள்வதை பார்வையிட்டார். மேலும் சிகிச்சை பெறுபவர்களுக்கு சரியான நேரத்தில் தரமான முறையில் போதிய உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி டீனிடம் அறிவுறுத்தினார்.

    வைரஸ் தொற்று சிகிச்சை நடவடிக்கைகளில் தொடர்ந்து விழிப்புடன் பணியாற்ற மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி டீன் அல்லி, முதன்மை மருத்துவர் மலையரசு மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.
    Next Story
    ×