search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

    தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 74,969 ஆக உள்ளது.

    சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன் விவரம் பின்வருமாறு:-  

    கோடம்பாக்கம் - 2,383 பேர்

    அண்ணா நகர் - 2,075  பேர்

    தேனாம்பேட்டை -1,868 பேர்

    ராயபுரம் - 1,476 பேர்

    தண்டையார்பேட்டை -1,464  பேர்

    திரு.வி.க. நகர்- 1,273 பேர்

    அடையாறு- 1,191 பேர்

    அம்பத்தூர்- 1,125 பேர்

    வளசரவாக்கம்- 990 பேர்

    திருவொற்றியூர்- 802 பேர்

    மாதவரம்- 651 பேர்

    ஆலந்தூர்- 551 பேர்

    பெருங்குடி- 508 பேர்

    சோழிங்கநல்லூர்- 457பேர்

    மணலியில் 377 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×