என் மலர்
செய்திகள்
X
பிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 27-ந்தேதி தேர்வு
Byமாலை மலர்8 July 2020 7:56 PM IST (Updated: 8 July 2020 7:56 PM IST)
பிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ந்தேதி தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி இருப்பதாவது:
பிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ந்தேதி தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மார்ச் 24ந்தேதி தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் ஜூலை 27 ந்தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கு தங்களின் சொந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
மாணவர்கள் புதிய நுழைவுச்சீட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 13ந்தேதி முதல் 17ந்தேதி வரை பள்ளிகளிலும் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
தனித்தேர்வர்கள் தங்களின் நுழைவுச்சீட்டுகளை குறிப்பிட்ட தேதிகளில் தனித்தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுத நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்வதற்காக தேவைக்கேற்ப போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும்.
நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் தேர்வர்கள் தனி அறைகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story
×
X