search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    ஊரடங்கு உத்தரவை மீறிய 3 பேர் மீது வழக்கு

    தாரமங்கலம் அருகே ஊரடங்கு உத்தரவை மீறிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகே கிருஷ்ணம்புதூரை சேர்ந்தவர் அரியாகவுண்டர் (வயது 45). இவர் ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி கடை நடத்தினார். பவளத்தானூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (45). இவர் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரத்தில் மளிகை கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்தார். சீரங்கனூரை சேர்ந்த ராஜூ (38) என்பவர் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்தார். இவர்கள் 3 பேர் மீதும் தாரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    Next Story
    ×