search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்ச்சல்
    X
    காய்ச்சல்

    குமரியில் வீடு வீடாக பரிசோதனை- முதல் நாளில் 55 பேருக்கு காய்ச்சல் இருந்தது கண்டுபிடிப்பு

    குமரி மாவட்டத்தில் வீடு-வீடாக சென்று முதல் நாள் நடத்திய பரிசோதனையில் 55 பேருக்கு காய்ச்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தவும், நோய் பாதித்தவர்களை முழுமையாக கண்டறியவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதற்காக மாவட்டம் முழுவதும் காய்ச்சல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டவர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

    அதாவது வீடுகளில் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் சுமார் 20 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடக்கிறது.

    இந்த பணிகள் தொடங்கப்பட்ட முதல் நாளில் சுமார் 5 லட்சம் பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 55 பேருக்கு காய்ச்சல் இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் பரிசோதனை முடிவுகள் வரவில்லை. இதே போல 2-வது நாளாக நேற்றும் பரிசோதனை நடத்தப்பட்டது.
    Next Story
    ×