search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்
    X
    சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

    சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    கரூர் மாவட்டத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் சத்துணவு சாப்பிடும் மாணவ- மாணவிகளுக்கான மானிய பணத்தை பெற்றோர் வங்கிக்கணக்கில் அரசு செலுத்தும் உத்தரவை கைவிட கோரியும், சமூக இடைவெளியுடன் சுகாதார முறையில் சூடான சத்துணவு வழங்கியதுபோல தற்போதும் தொடர்ந்து வழங்க சத்துணவு ஊழியர்கள் தயாராக இருக்கிறோம் என்பதை அரசுக்கு தெரியப்படுத்தும் வகையிலும், அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தியது போல, குறைந்த ஊதியம் பெறும் சமையலர், சமையல் உதவியாளர்களுக்கும், அமைப்பாளருக்கு உள்ளது போல ஓய்வூதிய வயதை 60 ஆக உயர்த்தி வழங்கக்கோரியும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கரூர் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுந்தரம் தலைமை தாங்கினார். சத்தணவு ஓய்வூதியர் சங்கத்தலைவர் பாலகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×