search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    சென்னையில் 2வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் பதிவான கொரோனா : மாவட்டம் வாரியாக முழு விவரம்....

    செங்கல்பட்டில் இன்று கொரோனாவுக்கு 274 பேரும், மதுரையில் 307 பேரும், திருவள்ளூரில் 209 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 3,500-ஐ தாண்டிய நிலையில், கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி வருகிறது.

    இந்த நிலையில், தமிழகத்தில் இன்று நான்காவது நாளாக மேலும் 4,150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.   

    சென்னையில் மேலும் 1,713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 2வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.                                                                                                                                                                              
    மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா தொற்றில் இருந்து 2,186 பேர் இன்று குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

    சென்னையில் இன்று 1,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் வாரியாக இன்று புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:-


    அரியலூர்     2     
    செங்கல்பட்டு     274     
    சென்னை     1,713     
    கோயம்புத்தூர்     23     
    கடலூர்         39     
    தருமபுரி         9     
    திண்டுக்கல்     74     
    ஈரோடு         26     
    கள்ளக்குறிச்சி     83     
    காஞ்சிபுரம்     152     
    கன்னியாகுமரி     8     
    கரூர்         10     
    கிருஷ்ணகிரி     9     
    மதுரை         308     
    நாகப்பட்டினம்     6     
    நாமக்கல்     4     
    நீலகிரி         1     
    பெரம்பலூர்     1     
    புதுக்கோட்டை     56     
    ராமநாதபுரம்     93     
    ராணிப்பேட்டை     67     
    சேலம்         50     
    சிவகங்கை     88     
    தென்காசி     40     
    தஞ்சாவூர்     16     
    தேனி         24     
    திருப்பத்தூர்     0     
    திருவள்ளூர்     209     
    திருவண்ணாமலை    141     
    திருவாரூர்     15    
    தூத்துக்குடி     41     
    திருநெல்வேலி     48    
    திருப்பூர்         6     
    திருச்சி         86     
    வேலூர்         179     
    விழுப்புரம்     109     
    விருதுநகர்     113     

    விமான நிலையத்தில் தனிமை     19    
    உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை     7
    ரயில் நிலையத்தில் தனிமை         1

    மொத்த எண்ணிக்கை     4150
    Next Story
    ×