search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமை மையம்
    X
    படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமை மையம்

    சேலம் காந்தி மைதானத்தில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா தனிமை மையம்

    சேலம் காந்தி விளையாட்டு மைதானம் 100-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் கொரோனா தனிமை மையமாக மாற்றப்பட்டுள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 100 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,134 ஆக அதிகரித்துள்ளது.

    சேலம் மாவட்டத்தில் நோய்த்தொற்று பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தனிமைபடுத்தும் முகாம் மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு தங்க வைப்பதற்காக சேலம் காந்தி விளையாட்டு மைதானம் கொரோனா தனிமை மையமாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாய் மைய விடுதி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தங்கும் விடுதி மற்றும் உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றில் 100-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் தனிமைப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டு உள்ளன. 
    Next Story
    ×