search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே
    X
    குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே

    ஈரானில் இருந்து மீனவர்கள் குமரி வருவது எப்போது?- கலெக்டர் பிரசாந்த் வடநேரே பதில்

    ஈரானில் இருந்து மீனவர்கள் குமரி வருவது எப்போது? என்பதற்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே பதில் அளித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடி தொழிலுக்காக ஈரான் நாட்டுக்கு 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சென்று இருந்தனர். கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவியதை தொடர்ந்து ஈரான் நாட்டுக்கு சென்றிருந்த மீனவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் அங்கேயே தவித்து வந்தனர். இதேபோல தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களும் ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். தமிழக அரசின் முயற்சியால் மத்திய அரசு அவர்கள் அனைவரையும் சொந்த ஊருக்கு அழைத்துவர நடவடிக்கை மேற்கொண்டது. அவர்கள் அனைவரும் கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட இருக்கிறார்கள். தூத்துக்குடியில் இருந்து குமரிக்கு அழைத்து வரப்படும் மீனவர்களை கொரோனா பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி வைக்க குமரியில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஈரானில் இருந்து அழைத்து வரப்படும் மீனவர்கள் எப்போது குமரி திரும்புவார்கள்? என்பது குறித்து குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ஈரானில் இருந்து குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கப்பலில் புறப்பட்டு விட்டனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் அடுத்த வாரம் (ஜூலை மாதம் முதல் வாரம்) குமரிக்கு வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். கப்பல் தூத்துக்குடி வந்து சேர்ந்ததும் அவர்களை 10-க்கும் மேற்பட்ட பஸ்களில் குமரிக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும். அவர்களை குமரியில் தங்க வைக்க பல்வேறு கல்லூரிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஈரானில் இருந்து வரும் மீனவர்களின் எண்ணிக்கை 500-க்கும் மேல் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×