search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீலா ராஜேஷ்
    X
    பீலா ராஜேஷ்

    தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் மாற்றம்- மீண்டும் ராதாகிருஷ்ணன் நியமனம்

    தமிழக சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்து வந்த பீலா ராஜேஷை மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக இருக்கும் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ராதாகிருஷ்ணன் வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.

    பீலா ராஜேஷ் வணிக வரித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றிய அனுபவம் உடையவர்.
    Next Story
    ×