search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    மேட்டூர் அணை வரும் 12ந்தேதி திறப்பு- நேரில் செல்கிறார் முதலமைச்சர்

    காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறப்பதற்கு வரும் 12ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் செல்கிறார்.
    சென்னை:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் காவிரியில் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 1740 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 1451 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 100.69 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 100.70 அடியானது.

    மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இதனை தொடர்ந்து காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி செய்வதற்கான தொடக்க பணிகள் நடந்து வருகின்றன.

    குறுவை சாகுபடி நீர்ப்பாசன வசதிக்காக வரும் 12ந்தேதி காலை 10 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.  இதற்காக தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணையை திறந்துவிட நேரில் செல்கிறார்.  மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் நீர் இருப்பு உள்ள நிலையில் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


    Next Story
    ×