என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ் பரிசோதனை
  X
  கொரோனா வைரஸ் பரிசோதனை

  திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 147 ஆக உயர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வத்தலக்குண்டு பகுதி சிறுமிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனா பாதிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் 147 ஆக உயர்ந்துள்ளது.
  வத்தலக்குண்டு:

  திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது சிறுமிக்கு கொரோனா அறிகுறி இருந்தது. இதனைத்தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு சோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வத்தலக்குண்டுவில் சிறுமியின் வீடு உள்ள தெருவை போலீசார் தனிமைப்படுத்தினர்.

  கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுமியின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

  தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது.

  Next Story
  ×