search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    வெளி மாவட்டங்களில் இருந்து அனுமதியின்றி வருபவர்களால் கொரோனா பரவும் அபாயம்- கலெக்டர் எச்சரிக்கை

    வெளி மாவட்டங்களில் இருந்து அனுமதியின்றி வருபவர்களால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை மூலம் அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு ஒலிப் பெருக்கி மூலமாக பொது மக்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் அடிக்கடி சோப்புபோட்டு கைகளை கழுவ வேண்டும், வெளியே சென்று பொருட்களை வாங்குகின்றபோது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வெளியே சென்று மீண்டும் வீடு திரும்புகின்ற போது கை, கால்களை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும்.

    பொதுமக்கள் நோய் அறிகுறிகளான இருமல், தொண்டைவலி, காய்ச்சல் ஆகியவை வந்தாலோ, சளி ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவர்களை அணுகி பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

    இ-பாஸ் பெறாமல் கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் நுழையும் நபர்களால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. முதலாவது அவர்கள் பரிசோதனைக்கு உட்படாமல் உள்ளே வருவதால் அவர்களுக்கு நோய்த் தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்ட பிறகே மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலும், தனிமைப்படுத்துதல் இல்லாததால் அவர் பல்வேறு நபர்களுடன் தொடர்பு கொண்டிருக்கும் சூழ்நிலைகள் உருவாகிறது. இது தடுப்பு நடவடிக்கையில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் அவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கும் கூட பாதிப்பை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் உருவாகிறது.

    அனுமதி பெறாமல் வெளியிடங்களில் இருந்து வருபவர்கள் குறித்த தகவல்களை உடனடியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கண்ட்ரோல் அறையில் உள்ள தொலைபேசி 1077/04652-231077 எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் பாஸ் இல்லாமல் வெளியூரில் இருந்து வரும் நபர்களுக்கு மாவட்டத்திற்குள் நுழைய உள்ளூர் மக்கள் உதவிகள் ஏதும் செய்யக்கூடாது.

    மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

    Next Story
    ×