search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரடங்கு உத்தரவு
    X
    ஊரடங்கு உத்தரவு

    ஊரடங்கால் முடக்கம்- விழுப்புரத்தில் வாழ்வாதாரத்தை இழந்த நகை தொழிலாளர்கள்

    ஊரடங்கு உத்தரவு காரணமாக 10 ஆயிரம் நகை பட்டறைகள் மூடப்பட்டு உள்ளது. இதனை நம்பிய தொழிலாளர்கள் வேலை இன்றி தவிக்கிறார்கள்.

    விழுப்புரம்:

    நகைகளை விரும்பாத பெண்களே இன்று இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு நகையின் மீது நாளுக்கு நாள் பெண்களுக்கு மோகம் அதிகரித்து வருகிறது. தினசரி நகையின் விலை உயர்ந்தாலும் நகை வாங்குவதில் மட்டும் கூட்டம் குறைந்தது இல்லை.

    சங்கு கழுத்துக்கு நகைகளை செய்து தருவதில் நகை தொழிலாளர்களின் பங்கு முக்கியம் ஆகும். ஆனால் இன்று ஊரடங்கு உத்தரவால் நகை தொழிலாளர்களின் வாழ்க்கை நசிந்து போய் உள்ளது.

    கோவைக்கு அடுத்தபடி விழுப்புரம் மாவட்டத்தில் தான் அதிக அளவு தங்க நகை ஆபரணங்கள் செய்யக் கூடிய தொழிலாளிகளை உள்ளடக்கிய ஒரு மாவட்ட மாகும் இங்கு மட்டும் 10 ஆயிரம் நகை பட்டறைகள் உள்ளது

    இந்தியாவில் சிறு நகைகளான மூக்குத்திகள், ஜிமிக்கிகள், குழந்தைகளுக்கான மோதிரங்கள் உற்பத்தி செய்வதில் சிறந்து விளங்கும் மாவட்டங்களில் விழுப்புரம் மாவட்டம் 5-ம் இடத்திலும், தமிழகத்தில் நகை உற்பத்தியில் 2-ம் இடத்திலும் உள்ளது. குறிப்பாக, சிறு நகை வர்த்தகத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த விற்பனை தேவையை விழுப்புரம் பூர்த்தி செய்து வருகிறது.

    தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக 10 ஆயிரம் நகை பட்டறைகள் மூடப்பட்டு உள்ளது. இதனை நம்பிய தொழிலாளர்கள் வேலை இன்றி தவிக்கிறார்கள். வேலை இல்லாததால் நகை தொழிலாளர்கள் குடும்பத்தினர் பட்டினியால் வாடுகிறார்கள்.

    இதுகுறித்து நகை பட்டறை தொழிலாளர்கள் கூறியதாவது:-

    நகை தொழில் மற்ற தொழில்கள் போல் அல்லாமல் கெரோனாலிருந்து மீண்ட பிறகும் பொதுமக்கள் நகை கடைகளுக்கு வருவதற்கு குறைந்தபட்சம் 6 மாதம் ஆகும். ஏற்கெனவே கையிருப்பில் உள்ள நகைகள் விற்பனை செய்வதற்கு மேலும் 3 மாதத்திற்கு மேல் ஆகும். இந்த நிலையில் தங்க நகை ஆபரணங்கள் செய்வதற்கு தொழிலாளிகள் வெளியூர்களிலிருந்து வருவதற்கும் முறையான பஸ் வசதி இல்லாத நிலையும் இருந்து வருகிறது.

    தற்போது ஏற்பட்டிருக்கிற பொருளாதார நெருக்கடியில் அவர்களுக்கு உரிய கூலி வழங்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு நகை தொழிலாளிகளை கவனத்தில் கொண்டு அவர்களிடம் உற்பத்தி செய்யும் பொருட்களை நேரிடையாகவே அரசு கொள்முதல் செய்ய வேண்டும். நலிந்த நகை தொழிலாளர்களுக்கு அரசு உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×