search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனாவில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பும் போலீசார்

    சென்னையில் காவலர்கள் முதல் உயர் போலீஸ் அதிகாரிகள் வரையில் கொரோனாவில் இருந்து மீண்டு பணிக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.
    சென்னை:

    கொரோனா வைரசுக்கு போலீசாரும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 200-க்கும் மேற்பட்ட போலீசார் வைரஸ் தாக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இவர்களில் காவலர்கள் முதல் உயர் போலீஸ் அதிகாரிகள் வரையில் கொரோனாவில் இருந்து மீண்டு பணிக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.

    கடந்த 18-ந்தேதி சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் கொரோனாவில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பினார். எஸ்பிளனேடு காவல்நிலையத்துக்கு சென்று கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அவரை வரவேற்று ஊக்கப்படுத்தினார்.

    இந்த நிலையில் அண்ணா நகர் துணை கமி‌ஷனர் கொரோனாவில் இருந்து மீண்டு நேற்று பணிக்கு திரும்பினார். போலீஸ் கமி‌ஷனர் மற்றும் உயர் அதிகாரிகள் அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    இந்தநிலையில் தி.நகர் துணை கமி‌ஷனர் அசோக் குமாரும் கொரோனாவில் இருந்து மீண்டு இன்று காலை மீண்டும் பணிக்கு வந்தார். அவரையும் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் துணை கமி‌ஷனரின் அலுவலகத்துக்கு சென்று வரவேற்றார். இதுபோன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்கள் பலரும் பணிக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.

    கொரோனாவால் பாதிக்கப்படும் போலீசாரை கண்காணிப்பதற்கு சிறப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த குழுவில் மைலாப்பூர் துணை கமி‌ஷனர் தேஸ்முக், உதவி கமி‌ஷனர் சுதர்சன் மற்றும் 5 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 25 பேர் அடங்கியுள்ளனர்.

    இவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் காவலர்களுக்கு அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படும் காவலர்களின் குடும்பத்தினர் பதட்டம் அடையாமல் இருக்கும் வகையில் அவர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள்.

    சென்னை காவல்துறை அதிகாரிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளால் கொரோனாவில் இருந்து எளிதாக மீண்டு வருவதாக பாதிக்கப்பட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×