search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்
    X
    ரெயில்

    திண்டுக்கல்லில் இருந்து 1875 வெளி மாநில தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் அனுப்பி வைப்பு

    ஜார்கண்ட், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த 1875 வெளி மாநில தொழிலாளர்கள் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு திண்டுக்கல்லில் இருந்து சிறப்பு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    திண்டுக்கல்:

    வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தொழில் நிமித்தமாக தமிழகத்திற்கு வந்து பல்வேறு மாவட்டங்களில் தங்கி பல்வேறு தொழிற்சாலைகளிலும், சாலையோர வியாபாரிகளாகவும், கட்டடத் தொழிலாளர்களாகவும் தங்கி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாணவர்களாகவும் பலர் தங்கியுள்ளனர்.

    ஊரடங்கு உத்தரவினால் வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாத நிலையில் அவர்கள் விரும்பினால் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி, ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்து திண்டுக்கல் மாவட்டத்தில் தங்கியிருந்த 539 தொழிலாளர்கள், தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த 176 தொழிலாளர்கள் என 715 தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த மாநிலமான ஜார்கண்ட் மாநிலத்திற்கும், ஒடிசா மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்து திண்டுக்கல் மாவட்டத்தில் தங்கியிருந்த 1,046 தொழிலாளர்கள் மற்றும் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த 114 தொழிலாளர்கள் என மொத்தம் 1,160 தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலமான ஒடிசா மாநிலத்திற்கும் என மொத்தம் 1,875 தொழிலாளர்கள் இன்று சிறப்பு ரயில்களில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    வெளிமாநில தொழிலாளர்களுக்கு பயணத்தின்போது 3 நாட்களுக்குத் தேவையான உணவு, பிஸ்கட், பிரெட், சப்பாத்தி, புரோட்டா, குடிநீர் பாட்டில், வெங்காயம் ஆகியவை அடங்கிய பை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    வெளிமாநிலம் செல்லும் தொழிலாளர்களுக்கு உணவுப்பொருட்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டது.

    முன்னதாக பீகார் மாநிலத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் தங்கியிருந்த 1339 தொழிலாளர்கள், தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த 261 தொழிலாளர்கள் என மொத்தம் 1600 தொழிலாளர்கள் கடந்த 20-ந் தேதி திண்டுக்கல்லில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக அவர்களுடைய சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 105 நபர்கள், டில்லியைச் சேர்ந்த 5 நபர்கள் மற்றும் ஜம்முகாஷ்மீரைச் சேர்ந்த 6 நபர்கள் என 116 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    வெளி மாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை அமைச்சர் சீனிவாசன் வழங்கி அனுப்பி வைத்தார். மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி உள்பட அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×