search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருப்பூர் சாமுண்டிபுரத்தில் 3 பேரை கத்தியால் குத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது

    திருப்பூர் சாமுண்டிபுரத்தில் 3 பேரை கத்தியால் குத்திய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் சாமுண்டிபுரம் செல்லம்மாள் காலனியை சேர்ந்தவர் லிங்கமூர்த்தி (45). டிரைவர். இவருடைய மனைவி கண்ணகி (40). இவருடைய தங்கை மகன் கண்ணன் (35). இவரும் அதே காம்பவுண்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த ராம்பிரபு (24) என்ற வாலிபர் லிங்கமூர்த்தி வீட்டு காம்பவுண்டிற்குள் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தார். இதுகுறித்து லிங்கமூர்த்தி ராம்பிரபுவிடம் கேட்டபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்து சென்ற ராம்பிரபு சிறிது நேரத்தில் பெரிய கும்பலுடன் லிங்கமூர்த்தி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் ராம்பிரபு அந்த கும்பலுடன் சேர்ந்து லிங்கமூர்த்தி, கண்ணகி, கண்ணன் ஆகியோரை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த லிங்கமூர்த்தி, கண்ணன் ஆகியோர் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து 15 வேலம்பாளையம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், ராம்பிரபுவின் மனைவி கீர்த்தனா (21), கீர்த்தனாவின் தாய் மீனா (43), மகேஸ்வரன், கண்ணன் உள்ளிட்ட 4 பேரையும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராம்பிரபு உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ராம்பிரபுவின் மாமனார் லட்சுமணனும் (52) கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×