search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாலிக்கயிறு உற்பத்தி
    X
    தாலிக்கயிறு உற்பத்தி

    தொடர் ஊரடங்கால் தாலிக்கயிறு உற்பத்தியாளர்கள் தவிப்பு

    கொரோனா பாதிப்பால் விதிக்கப்பட்ட தொடர் ஊரடங்கால் தாலிக்கயிறு உற்பத்தி மற்றும் விற்பனை முடங்கியுள்ளதால் வருமானமில்லாமல் மங்கல கிராம மக்கள் முடங்கி உள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த வரதராஜபுரம் கிராமத்தில் பெரும்பாலான குடும்பத்தினர் தாலிக்கயிறு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த கிராமத்துக்கு மங்கல கிராமம் என்று பெயர். தற்போதைய கொரோனா பாதிப்பால் விதிக்கப்பட்ட தொடர் ஊரடங்கால் தாலிக்கயிறு உற்பத்தி மற்றும் விற்பனை முடங்கியுள்ளதால் வருமானமில்லாமல் மங்கல கிராமமே மங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இங்கு உற்பத்தியாகும் தாலிக்கயிறுகள் தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. மேலும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த தாலிக்கயிறு உற்பத்தியாளர்கள் தற்போது தவித்து வருகின்றனர்.

    Next Story
    ×