search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    பேராவூரணி அருகே டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிராக பெண்கள் முற்றுகை போராட்டம்

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொரட்டூர் பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
    பேராவூரணி:

    பேராவூரணி அருகே கொரட்டூர் பகுதி வயல்காடுகளுக்கு மத்தியில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த கடை கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அரசு ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் மூடப்பட்டது. இந் நிலையில் நேற்று மீண்டும் கொரட்டூர் மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடையை திறப்பதையறிந்த கொரட்டூர், சோழகானார் வயல், கழனிவாசல் பகுதியை சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர், டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து கொரட்டூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    வயல் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளதால் மது அருந்தி விட்டு வயலில் பாட்டிலை உடைத்து போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் விவசாயம் செய்யும் பொழுது கண்ணாடி கிளாஸ் அதிக அளவில் விவசாய நிலத்தில் பதிந்து இருப்பதால் விவசாயம் செய்ய முடியாமல் இருந்து வருகிறோம். கடந்த 55 நாட்களாக பூட்டி இருந்த மதுகடையால் எங்கள் குடும்பங்கள் நன்றாக இருந்தது மீண்டும் மதுக்கடை திறக்கப்பட்டது.

    எங்கள் குடும்பங்கள் வாழ்க்கை மிகவும் மோசமாக உள்ளது. இதுமட்டுமின்றி இந்த மதுக்கடையால் பலரது குடும்பங்கள் கேள்விக்குறியாக உள்ளது. மதுக்கடைகள் திறக்கும் நேரத்தை விட அதிக நேரம் இந்த மதுக்கடை இயங்கி வருகிறது. இதனால் பெண்கள் வேலைக்கு அப்பகுதியில் செல்லமுடியவில்லை. எந்த நேரமும் 4 பேர், 6 பேர் கொண்ட கும்பல் ஒன்றாக நின்று கொண்டு மது அருந்துகின்றனர். அருந்தி விட்டு பாட்டிலை உடைத்து விட்டு செல்கின்றனர். செல்லும் போது கண்ணாடி பாட்டில் கால்களில் குத்தி காயப்படுத்துகிறது. என்றும் மெயின் ரோட்டில் செல்லும் போது குடித்துவிட்டு வழிபறியில் ஈடுபடுகின்றனர் என்றும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

    இதுபற்றி தகவலறிந்த பேராவூரணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம், பேராவூரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×