search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மா உணவகத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உணவை சாப்பிட்டு ருசி பார்த்த காட்சி.
    X
    அம்மா உணவகத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உணவை சாப்பிட்டு ருசி பார்த்த காட்சி.

    ராஜபாளையம் அம்மா உணவகத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திடீர் ஆய்வு

    ராஜபாளையம் அம்மா உணவகத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திடீர் ஆய்வு செய்து உணவை சாப்பிட்டு ருசித்து பார்த்தார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையத்தில் அம்மா உணவகம் ஜவஹர் மைதானம் அருகே அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி முதல் தொடர்ச்சியாக 3 வேளையும் உணவு இலவச மாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்குரிய செலவை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி ஏற்றுக் கொண்டுள்ளார்.

    நகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் அ.தி.மு.க. நகரச் செயலாளர் பாஸ்கரன் முன்னிலையில் தினமும் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் தினமும் மூன்று வேளையும் 4000 பொது மக்கள் உணவு வாங்கி சாப்பிட்டுச் செல்கின்றனர். தினமும் 3 வேளை அனை வருக்கும் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ராஜபாளையம் அம்மா உணவகத்திற்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திடீரென வருகை புரிந்தார். கலெக்டர் கண்ணன், நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள், நகராட்சி வருவாய் அலுவலர் முத்துச்செல்வம், வட்டாட்சியர் ஆனந்தராஜ், டி.எஸ்.பி. நாகசங்கர் உட்பட அதிகாரிகளும் வந்திருந்தனர்.

    அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவு தயாரிக் கப்படும் வழிமுறைகள், கடைப்பிடிக்கப்படும் சுகாதாரம் மற்றும் பரா மரிப்பு வழிமுறைகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கிய அமைச்சர் ஊழியர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

    பின்னர் அங்கு வந்திருந்த ஏழைகளுக்கு உணவு வழங்கியதுடன் உணவை சாப்பிட்டு ருசி பார்த்தார்.

    ஒன்றிய செயலாளர் குருசாமி, பேரவை செயலாளர் வக்கீல் முருகேசன், கூட்டுறவு பால் உற்பத்தி யாளர் சங்க தலைவர் வனராஜ், துணைத் தலைவர் கந்த கிருஷ்ணகுமார், பூபதி ராஜா கூட்டுறவு வங்கி தலைவர் ராதாகிருஷ்ண ராஜா, அவைத்தலைவர் பரமசிவம், மாவட்ட பிரதிநிதிகள் மாரியப்பன், ராதா கிருஷ்ணராஜா, முன்னாள் ஒன்றிய செயலாளர் முருகையா பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×