search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் வீரராகவ ராவ்
    X
    கலெக்டர் வீரராகவ ராவ்

    கமுதி நூற்பாலையில் கலெக்டர் ஆய்வு

    அச்சங்குளம் நூற்பாலையில் தினமும் உற்பத்தி செய்யபடும் கைத்தறி நூலின் அளவு, பணியாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா? என ஆய்வு செய்தார்.

    கமுதி:

    கமுதி அருகே அன்றியேந்தலில் கலெக்டர் வீரராகவ ராவ் இலவச தொகுப்பு வீடுகள், அச்சங்குளம் நூற்பாலையில் தினமும் உற்பத்தி செய்யபடும் கைத்தறி நூலின் அளவு, பணியாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா? என ஆய்வு செய்தார்.

    அதன்பின் நத்தம் ஊராட்சியில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் வளர்க்கப்பட்டு வரும் மரக் கன்றுகளில் பணியாளர்கள் தண்ணீர் ஊற்றுவதை ஆய்வு செய்து, செழிப்பாக குறுங்காடுகளை வளர்த்த ஊராட்சி தலைவர் போத்தி, அதனை நடைமுறைப்படுத்திய ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ரவி, ராஜேந்திரனை (கிராம ஊராட்சிகள்), கலெக்டர் பாராட்டினார்.

    அதன்பின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் பணிகள் தொடங்கவுள்ள முஷ்டக் குறிச்சியில் 34 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கவுள்ள கண் மாய், குடிமராமத்து சங்க உறுப்பினர்களிடம் கலந்துரையாடினார்.

    ஆய்வின்போது, அச்சங்குளம் நூற்பாலை மேலாளர் சங்கரராஜ், மாவட்ட தொழில் மைய மேலாளர் மாரியம்மாள், தலைவர் காசிவிஸ்வநாதன், முஷ்டக்குறிச்சி ஊராட்சி தலைவர் பாலமுருகன், முதல்நாடு தலைவர் காசிராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×