search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை கொள்ளை
    X
    நகை கொள்ளை

    ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை

    ஊரடங்கு காலத்திலும் கைவரிசை ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை பெரம்பலூர் அருகே துணிகரம்

    பெரம்பலூர் அருகே ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள 4 ரோடு மின்சார வாரியம் அலுவலகம் பின்புறம் ரெங்கம்மாள் நகரில் வசித்து வருபவர் வாசுதேவன் (வயது 65). ஓய்வு பெற்ற வேளாண் அலுவலரான இவர் நேற்று இரவு தனது வீட்டின் மாடியில் மனைவி தேன்மொழி மகன் வசந்தன், மருமகள் புவனேஸ்வரி ஆகியோருடன் தூங்கி கொண்டிருந்தார்.

    வீட்டின் கீழ் பகுதியை அவர் பூட்டாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்து யாரும் இல்லாததால் மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். மேலும் அங்குள்ள தனி அறையில் கட்டிலின் மேல் இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த நெக்லஸ், செயின், மோதிரம், வளையல் உள்ளிட்ட 25 பவுன் தங்க நகையும், விலை உயர்ந்த 4 செல்போன்களையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

    இன்று விடியற்காலை வீட்டின் கீழ் பகுதியில் வந்து பார்த்தபோது கதவு முழுவதுமாக திறந்து கிடந்தது கண்டு வாசுதேவன் அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோதுதான் அங்கு நகை மற்றும் செல்போன் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து வாசுதேவன் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோப்ப நாயுடன் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வு இல்லாத இந்த சமயத்தில் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளது அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியிலும், பீதியிலும் ஆழ்த்தியுள்ளது.

    Next Story
    ×