search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடை
    X
    டாஸ்மாக் கடை

    கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட 711 இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கும்

    சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில் தடை செய்யப்பட்ட தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படாது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை கண்டறிந்து அதனை தமிழக அரசு பட்டியலாக வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ளார்.

    இதன்படி அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் 711 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ளது.

    அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி சென்னையிலேயே தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. சென்னையில் மட்டும் சுமார் 200-ம் மேற்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ளன.

    கொரோனா வைரஸ்

    ராயபுரம், எழும்பூர், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, புரசைவாக்கம், பெரம்பூர், வேப்பேரி, சேப்பாக்கம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர், எம்.கே.பி. நகர் உள்ளிட்ட பல்வேறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

    சென்னையையொட்டி உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. கோவளம், கோவிலம்பாக்கம், லட்சுமிபுரம், மாடம்பாக்கம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் வருகின்றன.

    சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில் தடை செய்யப்பட்ட தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படாது.

    Next Story
    ×