search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
    X
    அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

    1200 முஸ்லிம் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்

    சிவகாசியில் 1200 முஸ்லிம் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசியை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.
    சிவகாசி:

    கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதிலும் அ.தி.மு.க. சார்பாகவும், தமிழக அரசு சார்பாகவும் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆலோசனைக்கு இணங்க விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பணியாளர்கள், கிறிஸ்தவ ஜெப ஊழியர்கள், ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள், பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் என மாவட்டம் முழுவதிலும் அ.தி.மு.க. சார்பாக தொடர்ந்து பல்வேறு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    ரூ.19 லட்சத்து 52,000 ஆயிரம் செலுத்தி மாவட்டத்தில் உள்ள 8 அம்மா உணவகங்கள் மூலம் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக பொதுமக்களுக்கு இலவசமாக 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் சிவகாசியில் 1200 முஸ்லிம் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசியை பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். தொடர்ந்து பாவடிதோப்பு ஆட்டோ டிரைவர்களுக்கும் தலா 10 கிலோ அரிசியை அமைச்சர் வழங்கினார்.

    நகர செயலாளர் அசன் பதூரூதீன், பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ், மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி செயலாளர் முத்துப்பாண்டி, சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி மாவட்ட சிறுபான்மையினர் அணி செயலாளர் செய்யது இப்ராஹீம், மாவட்ட மாணவரணி செயலாளர் நல்லதம்பி, இந்திய தேசிய லீக் மாநில தலைவர் செய்யது ஜஹாங்கீர், தமிழ்மாநில முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் திவான்பாட்ஷா, மாவட்ட சிறுபான்மையினர் துணைத்தலைவர் முகமதுநவாப், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ஜப்பார், சிறுபான்மையினர் பிரிவு நகர செயலாளர் சாகுல்ஹமீது, அ.தி.மு.க. நகர இளைஞரணி செயலாளர் கே.டி.ஆர்.கார்த்திக், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சங்கர் மற்றும் ஜமாத்தார்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×