search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக்
    X
    டாஸ்மாக்

    மதுக்கடையை திறக்க தடை கோரி வழக்கு- ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

    தமிழகத்தில் மதுக்கடையை திறக்க தடை கோரிய மனு விரைவில் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், தனசேகரன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தமிழத்தில், 6,823 மதுபானக்கடைகள் இருந்தும் நாளுக்குநாள் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் இளவயது விதவைகள் அதிகம் உள்ள மாநிலமாகவும் தமிழகம் மாறிக்கொண்டு வருகிறது. 2002-03 நிதியாண்டில் ரூ.2 ஆயிரத்து 800 கோடியாக இருந்த மதுபான விற்பனை, 2018-19 நிதியாண்டில் ரூ.31 ஆயிரம் கோடியாகவும் உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் இது ரூ.34 ஆயிரம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் அமலுக்கு வந்த ஊரடங்கினால், மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால், குற்றங்களும் குறைந்துள்ளன. மதுவுக்கு அடிமையாக இருந்தவர்கள் கூட தற்போது மனம் திருந்தியுள்ளனர்.

    எனவே, இந்த பூரண மதுவிலக்கை தொடர்ந்து அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஊரடங்கு காலத்துக்குப் பிறகும் தமிழகத்தில் மதுபானக்கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
    Next Story
    ×