search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
    X
    தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

    தாராபுரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அதிகாரிகளை கண்டித்து 50-க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசமரம் அருகே உள்ள சின்னா மைதானம் பகுதி 4 பேர் கொரோ னாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்கு பின்பு குணமடைந்து வீடு திரும்பினர். இதற்கிடையே அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டு பொதுமக்கள் வெளியில் வரவும், வெளியாட்கள் உள்ளே நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நேற்று அப்பகுதியை சேர்ந்த சிலர் பொருட்கள் வாங்க போலீசாரிடம் அனுமதி பெற்று வெளியில் வந்துள்ளனர்.

    அப்போது அங்கு கண்காணிப்பு பணிக்கு சென்ற வருவாய்துறையினர் மற்றும் சப்-கலெக்டர் பவன்குமார் ஆகியோர் இதை பார்த்து காரை விட்டு இறங்கி சென்று அவர்களிடம் எதற்காக வெளியில் வந்தீர்கள் உங்களுக்கு தேவையான வற்றை மாவட்ட நிர்வாகமே செய்து கொடுக்கிறது. தேவை இல்லாத காரணங்களுக்காக வெளியில் வராதீர்கள் என்றனர்.

    மேலும் அங்கு பணியில் இருந்த போலீசாரிடமும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மக்களை வெளியில் விட வேண்டாம் என கேட்டு கொண்டார்.

    வெளியில் வருவதை தடுத்த அதிகாரிகளை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் தாராபுரம் டி.எஸ்.பி. ஜெயராம், இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×