search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை உயிரிழப்பு
    X
    குழந்தை உயிரிழப்பு

    கொரோனாவால் அனுமதி மறுப்பு- 2 கர்ப்பிணிகளின் குழந்தை உயிரிழப்பு

    கொரோனாவை காரணம் காட்டி 2 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துவிட்டதால் அவர்களின் குழந்தை உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


    கொரோனாவை காரணம் காட்டி 2 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துவிட்டதால் அவர்களுக்கு குழந்தை வயிற்றிலே இறந்து பிறந்த சம்பவம் உறவினர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பிரசவம் தவிர மற்ற நோய் இடர்பாடுகளுடன் தொடர்புடைய நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    மதுரை உசிலம்பட்டியை அடுத்த பொட்டுலுப்பட்டியை சேர்ந்த வினோத் என்பவரின் மனைவி பாண்டிமீனா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. எனவே அவரை உறவினர்கள் நாட்டாம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கொரோனாவை காரணம் காட்டி அவருக்கு பிரசவம் பார்க்க ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துவிட்டது.

    இதையடுத்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கும் இவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பாண்டிமீனா குடும்பத்தினர் தவிக்க நேரிட்டது.

    செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வினோத் குடும்பத்தினர் வேறு வழியின்றி பாண்டிமீனாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் குழந்தை வழியிலேயே இறந்து விட்டது.

    மற்றொரு சம்பவம்...

    இதே போல உசிலம்பட்டியை அடுத்த செட்டியம்பட்டியைச் சேர்ந்த தவசி என்பவரின் மனைவி தீபிகா என்பவருக்கும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் கொரோனாவை காரணம் காட்டி பிரசவத்துக்கு அனுமதி மறுத்து உள்ளனர்.

    இதையடுத்து அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே தீபிகாவின் வயிற்றில் குழந்தை இறந்து பிறந்தது.


    Next Story
    ×