என் மலர்

  செய்திகள்

  கலெக்டர் பல்லவி பல்தேவ்
  X
  கலெக்டர் பல்லவி பல்தேவ்

  தேனி மாவட்ட எல்லைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆய்வு செய்தார்.

  தேவதானப்பட்டி:

  தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆய்வு செய்தார். தேனி மாவட்ட எல்லைப்பகுதியான போடி-முந்தல் பகுதியில் உள்ள வாகன சோதனை சாவடி வழியாக கேரளா மாநிலத்திலிருந்து வருகின்ற வாகனங்கள் மற்றும் காட்ரோடு வாகன சோதனைச்சாவடியில் பிற மாவட்டங்களிலிருந்து வருகின்ற வாகனங்களை அவர் ஆய்வு செய்தார்.

  மேலும் தேனி மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய வாகனங்களின் எண்ணிக்கைகள், வாகனத்திற்கான அனுமதிச்சீடு மற்றும சமூக இடைவெளியினை கடைபிடிப்பதன் அடிப்படையில் வாகனங்களில் பயணிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட நபர்களின் எண்ணிக்கை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கைகள் தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் ஆகியன குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

  மேலும் சுகாதாரத் துறையின் மூலம் வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுக்கான செய்யப்படும் மருத்துவ பரிசோதனை, கண்காணிப்பு பணிகள் ஆகியவைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது, உரிய வாகன அனுமதிச்சீட்டு பெறப்பட்டு, அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேல் பயணம் மற்றும் மாற்று நபர்கள் பயணம் செய்த ஒரு வாகனத்தின் மீது வழக்கு பதிவு செய்திடவும், மேலும் வாகனங்களின் அனுமதிச் சீட்டு விதிமுறைகளை சரிவர கடைபிடிக்காத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்திட காவல் துறையினருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

  Next Story
  ×