search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தேனி, பெரியகுளத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து கலெக்டர், எம்.பி.ஆய்வு

    தேனி, பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    தேனி:

    தேனி, பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், தலைமை தாங்கினார். தேனி எம்.பி. ரவீந்திரநாத்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி, பெரியகுளம் சப்-கலெக்டர் சிநேகா, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) தியாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர நாத்குமார் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்திட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் நோய் தொற்று பராவாமல் தடுத்திடும் வகையில், சுகாதாரப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தை பொருத்தவரை மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அலுவலர்கள், காவல் துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

    தேனி மாவட்டத்தில் கடந்த 12 நாட்களில் கொரோனா புதிய தொற்று ஏற்படவில்லை என்பது ஒரு சாதனையாகும். இந்த தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் துறைகளை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவத்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு ரவீந்திரநாத்குமார் பேசினார்.

    Next Story
    ×