search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை
    X
    தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை

    சிறுகமணி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை

    சிறுகமணி பேரூராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், தூய்மை பணியாளர்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களால் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

    நெ.1டோல்கேட்:

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.

    இந்த தடுப்பு நடவடிக்கை காலகட்டத்தில் தன்னலம் கருதாது களப்பணியாற்றும் அரசின் பல்வேறு துறையினை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோறின் நலனை காக்கும் வகையில் அவர்களுக்கு கொரோனா தொற்று குறித்த மருத்துவ பரிசோதனை செய்ய தமிழக அரசு உத்தவிட்டது.

    இதன்தொடர்ச்சியாக திருச்சி மாவட்டம் சிறுகமணி பேரூராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள், சுயஉதவிக் குழுக்கள், டெங்கு மஸ்தூர் பணியாளர்களுக்கு பேரூராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் செயல் அலுவலர் உமாராணி தலைமையில் குழுமணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களால் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

    அப்போது பணியாளர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவர்ளுக்கு கொரோனா வைரசின் அறிகுறிகள், அவற்றில் இருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக்கொள்வது வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து சமூக இடை வெளியை பின்பற்ற வேண்டும் என விழிப்புணர்வு குறித்து மருத்துவ குழுவினர்களால் அறிவுறுத்தப்பட்டது.

    Next Story
    ×