என் மலர்

  செய்திகள்

  மழை
  X
  மழை

  நத்தம் பகுதியில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாள பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.

  நத்தம்:

  நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பரளி, வத்திபட்டி, கோவில்பட்டி, லிங்கவாடி, சமுத்திராபட்டி, சிறுகுடி, சீரங்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திடீர் என பலத்த சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. அரை மணி நேரமாக காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. நத்தம் அருகே சீரங்கம்பட்டி பகுதியில் அழகர்சாமி என்பவரது தோட்டத்தில் வாழை, வேம்பு, தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதே பகுதியில் கொட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த சின்னு என்பவரது ஆட்டுக்குட்டி ஒன்று கொட்டம் சாய்ந்து இறந்து போனது.

  மேலும் பிள்ளையார் கோவில் மேற்கூரை காற்றில் சாய்ந்தது. இதைப்போலவே பல இடங்களிலும் மின் கம்பங்கள் சாய்ந்து வயர்கள் அறுந்து கிடந்தது.

  Next Story
  ×