என் மலர்

  செய்திகள்

  திறக்கப்பட்ட சாலையை படத்தில் காணலாம்.
  X
  திறக்கப்பட்ட சாலையை படத்தில் காணலாம்.

  ஓசூர் அருகே தனிமைப்படுத்தப்பட்ட பேகேபள்ளி கிராமத்தில் சீல் அகற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓசூர் அருகே தனிமைப்படுத்தப்பட்ட பேகேபள்ளி கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  ஓசூர்:

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியம் பேகேபள்ளி கிராமத்தை சேர்ந்த ஒரு நபர், வேறு மாவட்டத்தை சேர்ந்த கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்ததாக மருத்துவ விசாரணையில் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை மூலம் அந்த நபர் கண்காணிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டார்.

  பின்னர், அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம், பேகேபள்ளியை தீவிர கண்காணிப்பு பகுதியாக கடந்த 17-ந் தேதி அறிவித்தது இதைத் தொடர்ந்து, அந்த கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது. மேலும் கண்காணிப்பு பணிகள், கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்றன. அத்துடன், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பேகேபள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

  இந்த நிலையில், கிராமத்தை சேர்ந்த சிலருக்கு மருத்துவ பரிசோதனை செய்து மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வில், கொரோனா தொற்று இல்லை என்று உறுதியானதால் நேற்று அந்த கிராமத்திற்கு வைக்கப்பட்ட சீல் திறக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தலிலிருந்து தங்கள் கிராமம் மீண்டதை அடுத்து பேகேபள்ளி மக்கள், நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது வரை கொரோனா நோய்த்தொற்று உள்ளவர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×