என் மலர்

  செய்திகள்

  முகாமில் தங்கியிருப்பவர்கள் உற்சாகமாக கும்மியடித்த காட்சி.
  X
  முகாமில் தங்கியிருப்பவர்கள் உற்சாகமாக கும்மியடித்த காட்சி.

  திருவண்ணாமலையில் முகாமில் தங்கி இருப்பவர்களை உற்சாகப்படுத்த மனநல பயிற்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவண்ணாமலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் முகாமில் தங்கி இருப்பவர்களை உற்சாகப்படுத்த மனநல பயிற்சி அளிக்கப்படுகிறது.

  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள சாந்தி மலை ஆசிரம முகாமில் 50க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.

  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாத வெளியூர் பயணிகள் மற்றும் ஆதரவற்றோர், முதியவர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.

  முகாமில் தங்கி இருப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பதற்காக காலை, மாலை வேளைகளில் மனநல பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களை கும்மியடிக்க செய்தும், நடனம் ஆடவைத்தும் உற்சாகப் படுத்துகின்றனர். மேலும் அவர்களைப் பற்றி கூறும்படி செய்து ஆலோசனைகளை வழங்குகின்றனர். தியானம், யோகா உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

  இந்த பயிற்சிகள் காரணமாக வீட்டில் முடங்கி இருக்கும் பொதுமக்களை விட அவர்கள் மகிழ்ச்சியாக காணப்படுகிறார்கள். இந்த மனநல பயிற்சி அவர்களுக்கு வாழ்க்கையின் மீது புதிய நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

  Next Story
  ×