என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  வாரணாசியில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாரணாசியில் இருந்து திருவள்ளூருக்கு வந்த 125 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  திருவள்ளூர்:

  திருச்சி, பெரம்பலூர் நாகை மாவட்டத்தை சேர்ந்த 125 பேர் கடந்த மாதம் வாரணாசிக்கு சுற்றுலா சென்றனர்.

  ஊரடங்கு காரணமாக அவர்கள் குறிப்பிட்ட நாளில் தமிழகம் திரும்ப முடியாமல் தவித்தனர். பின்னர் அவர்கள் உத்தரபிரதேச மாநில அதிகாரிகள் ஒத்துழைப்புடன் 3 பஸ்களில் புறப்பட்டனர்.

  கடந்த 17-ந்தேதி திருவள்ளூர் வந்த 125 பேரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

  கனகவல்லிபுரத்தில் செயல்படும் தமிழ்நாடு அரசு காவல் பயிற்சி மையத்தில் 125 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

  இதில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

  திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரிசோதனைக்காக ரேபிட் கிட் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் உள்ள வயது முதியவர்கள், இதர நோய் உள்ளவர்கள் 900 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
  Next Story
  ×