என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
முக்கடல் அணை நீர்மட்டம் 3.50 அடியாக சரிவு
Byமாலை மலர்21 April 2020 10:08 AM GMT (Updated: 21 April 2020 10:08 AM GMT)
முக்கடல் அணை நீர்மட்டம் இன்று காலை 3.50 அடியாக சரிந்துள்ளது. நாளுக்கு நாள் நீர்மட்டம் சரிந்து வருவதால் கோடையை சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் நகர மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து பைப் லைன் மூலமாக கிருஷ்ணன் கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது நாகர்கோவில் நகர மக்களுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். முக்கடல் அணை நீர்மட்டம் இன்று காலை 3.50 அடியாக சரிந்துள்ளது.
நாளுக்கு நாள் நீர்மட்டம் சரிந்து வருவதால் கோடையை சமாளிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை பொதுமக்களுக்கு சப்ளை செய்து வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, சிற்றாறு அணை பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஆனால் மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலை அடித்து வருகிறது. வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டாலும் மழை பெய்யவில்லை.
கோடை மழை கொட்டி தீர்த்தால் மட்டுமே நாகர்கோவில் நகர மக்களின் குடிநீர் தாக்கத்தை தீர்க்க முடியும். எனவே கோடை மழையை எதிர்நோக்கி அனைவரும் காத்திருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து மழை கண்ணாமூச்சி காட்டி வருகிறது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 29.95 அடியாக இருந்தது. அணைக்கு 80 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 31.20 அடியாக உள்ளது. அணையில் இருந்து 20 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 7.60 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 7.71 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 42.65 அடியாகவும் உள்ளது.

Next Story
×