search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water level declined"

    மழை இல்லாததால் முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. #MullaperiyarDam
    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் அணையின் நீர் மட்டம் 136 அடி வரை உயர்ந்தது. ஆனால் தற்போது மழை இல்லை. மேலும் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர் மட்டம் 131.50 அடியாக குறைந்துள்ளது. 1062 கன அடி நீர் வருகிறது. 1915 கன அடி திறந்து விடப்படுகிறது.

    வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக அணையின் நீர் மட்டம் 69 அடியாக நீடிக்கிறது. அணைக்கு 2,140 கன அடி நீர் வருகிறது. அது அப்படியே திறந்து விடப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 52.40 அடியாக உள்ளது. 12 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 125.95 அடியாக உள்ளது. 27 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 1.6, தேக்கடி 1.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. #MullaperiyarDam
     
    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து 4,900 கன அடியாக குறைந்தது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 5,600 கன அடியாக வந்தது.

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததால் இன்று வினாடிக்கு நீர்வரத்து 4,900 கன அடியாக குறைந்தது.

    ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி சென்று மகிழ்ந்தனர். #Hogenakkal

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததால் இன்று ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,400 கன அடியாக குறைந்தது.
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 12,500 கனஅடியாக இருந்தது.

    தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததால் இன்று நீர்வரத்து வினாடிக்கு 9,400 கன அடியாக குறைந்தது.

    இன்று விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் மெயின்அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் பரிசல் சவாரி சென்று சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

    ×