search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரிசி
    X
    அரிசி

    ஞாறான்விளை அகதிகள் முகாமில் 43 குடும்பங்களுக்கு நிவாரண பொருள்கள்- மார்த்தாண்டம் போலீசார் வழங்கினர்

    ஊரடங்கு உத்தரவால் ஞாறான்விளை அகதிகள் முகாமில் பாதிக்கப்பட்ட 43 குடும்பங்களுக்கு தேவையான நிவாரண பொருள்களை மார்த்தாண்டம் போலீசார் வழங்கினர்.

    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் அருகே ஞாறான்விளையில் அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 43 குடும்பத்தினர் தங்கி உள்ளனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக இங்கு வசிக்கும் மக்கள் உணவு இன்றி அவதிப்பட்டனர். தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் அகதிகள் குடும்பத்தினருக்கு தேவையான நிவாரண பொருள்களை சேகரித்து வழங்கினர்.

    இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துமாரி, சிவசங்கரன் மற்றும் போலீசார் முகாமுக்கு சென்று அகதிகளுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து உணவு பொருள்களை வழங்கினர்.

    Next Story
    ×