search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    ஊரடங்கு உத்தரவை சாதகமாக பயன்படுத்தி 3 இடங்களில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்

    கும்பகோணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கொள்ளையர்கள் 3 இடங்களில் கைவரிசை காட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் கொரோனா தடை உத்தரவு நேரத்தில் 3 இடங்களில் கைவரிசைகாட்டி பலலட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களைதிருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

    சென்னையை சேர்ந்தவர் இப்ராகிம் மகன் நவாஸ் (வயது45). இவருக்கு சொந்தமான பார்சல் வேன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்சல் இறக்குவதற்காக கும்பகோணம் அருகே செட்டி மண்டபம் பார்சல் அலுவலகத்திற்கு வந்தது.

    கொரோனா முன்னெச்சரிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பார்சல் வேனை பார்சல் அலுவலகத்தில் நிறுத்தியிருந்தனர்.

    இந்நிலையில் 3-ந்தேதி சென்று பார்த்தபோது வேனை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். அங்குள்ள சிசிடிவி கேமராவை பார்த்த போது பார்சல் வேனை நள்ளிரவு 3 மணியளவில் யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பார்சல் அலுவலக மேலாளர் மீராசாகிப் மகன் ஹாஜா அலாவூதீன் தாலுக்கா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

    திருட்டுப்போன பார்சல் வேனின் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் என கூறப்படுகிறது. இதேபோல் நேற்று முன்தினம்இரவு அதே பகுதியில் இன்னாஸ் (30) என்பவரது பூட்டியிருந்த மளிகை கடையிலும், அதன் அருகிலுள்ள டயர் கம்பெனியிலும் சுமார் ரூ.1லட்சம் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பொருட்கள் திருட்டு போனது. இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

    கும்பகோணத்தில் ஊரடங்கு உத்தரவால் வெளியில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி காணப்படுகிறது. இதனை தங்களுக்கு சாகமாக பயன்படுத்திக்கொண்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். 

    Next Story
    ×