search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மது குடிக்க டாஸ்மாக் கடையில் துளை போட்டு புகுந்த அண்ணன்-தம்பி கைது

    கும்மிடிப்பூண்டி அருகே மது குடிக்க டாஸ்மாக் கடையில் துளை போட்டு புகுந்த அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த காயளார்மேடு கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக தற்போது மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் நேற்று இரவு அங்கு வந்த 2 வாலிபர்கள் மதுக்கடையின் சுவரில் துளைபோட்டு மது குடிக்க உள்ளேபுகுந்தனர். பின்னர் கடையில் இருந்த 3 பெட்டி மதுபாட்டில்களை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றனர்.

    இதற்குள் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் 2 வாலிபர்களையும் மடக்கிப் பிடித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் பெரிய ஓபுளாபுரம் பகுதியைச் சேர்ந்த அண்ணன்- தம்பிகளான ரமேஷ்,வெற்றிவேல் என்பது தெரிந்தது.

    கடந்த சில நாட்களாக மது குடிக்காததால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கண்டிப்பாக மது குடிக்க வேண்டும் என்ற ஆசையில் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை திருடியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    கைதான ரமேஷ் கார் டிரைவர்ஆவார். அவரது தம்பி வெற்றிவேல் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    திருவள்ளூரை அடுத்த காக்களூர் பைபாஸ் சாலையில் மதுக்கடை உள்ளது. இதில் ஊழியர்களாக வேலை பார்க்கும் புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த செந்தில், திருவள்ளூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையாருக்கு தெரியாமல் கடையை திறந்து மதுபாட்டில்களை திருடி கூடுதல் விலைக்கு விற்க ஜீப்பில் எடுத்துச் சென்றனர்.

    இதுதொடர்பாக அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பார் ஊரிமையாளர் ஒருவருக்கு இந்த மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்க ஜீப்பில் வந்து மதுபாட்டில்களை திருடி இருப்பது தெரிய வந்தது.

    அவர்களிடம் இருந்து ரூ.4லட்சம் ரொக்கம், 240 பீர் பாட்டில்கள் 350 குவாட்டர் பாட்டில் மற்றும் ஜீப் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×